ஏறத்தாள ஏழு தசாப்தங்களாகத் தமிழீழ மக்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை வேண்டிப் புலம்பெயர் தேசங்களில் அறப்போர் தொடுப்பதற்குப் புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் தயாராகி வருகின்றனர்.
இதன் முதற்கட்டமாக திங்கட்கிழமை இன்று மதியம் இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ் மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை அறப்போர் செயற்பாட்டாளர் சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுத் தொடங்கி வைக்கின்றார்.
பரமேஸ்வரன் அவர்களுக்கு சமாந்தரமாக பிரித்தானியா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான நீதிராஜா, திருக்குமாரன் ஆகியோரும் அதேயிடத்தில் இருந்து மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 


No comments
Post a Comment