Latest News

August 24, 2015

சாதனை வீரர் குமார் சங்கக்கார – ஒரு பார்வை
by Unknown - 0

இலங்கை அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக இருந்த குமார் சங்கக்கார இன்று நிறைவுபெறும் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அவரது சாதனை தொடர்பிலான ஒரு பார்வை பின்வருமாறு,

12,400 – டெஸ்ட் அரங்கில் சங்கக்காரவினால் மொத்தமாக குவிக்கப்பட்ட ஓட்டங்கள். அத்துடன் இடது கை துடுப்பாட்ட வீரர் ஒருவரினால் குவிக்கப்பட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும். மேலும் ஐந்தாவது மொத்த ஓட்ட எண்ணிக்கையும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஜீலை 2000 ஆம் ஆண்டு சங்கா டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பின்னர் அவரது ஓட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகளவு ஓட்டங்களைக் குவித்துள்ளவர் சச்சின் மாத்திரமே.
11,679 – மூன்றாவது வீரராக களமிறங்கிய போது சங்காவினால் குவிக்கப்பட்டுள்ள மொத்த ஓட்ட எண்ணிக்கை. இதுவே டெஸ்ட் அரங்கில் மூன்றாவது வீரராக களமிறங்கி குவிக்கப்ட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.  இவருக்கு அடுத்ததாக ட்ராவிட் 10,524 ஓட்டங்களை மூன்றாவது வீரராக களமிறங்கி குவித்துள்ளார்.

57.40 – கடந்த 40 வருடங்களில் டெஸ்ட் வீரரால் பெறப்பட்டுள்ள அதிகூடிய சராசரி இதுவாகும்.
38 – இடதுகை துடுப்பாட்ட வீரர் பெற்றுள்ள அதிகூடிய சதங்களுக்கான சாதனையும் சங்கா வசமே உள்ளது. அதிகூடிய சதங்கள் பெற்றுள்ளவர்கள் வரிசையில் சங்கக்கார நான்காவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6,554 – சங்கா மற்றும் ஜயவர்த்தன ஆகியோருக்கிடையிலான இணைப்பாட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 120 இனிங்ஸில் இந்த சாதனை புரியப்பட்டுள்ளதுடன், எந்தவொரு விக்கெட்டுக்குமான் இணைப்பாட்ட சாதனையான 624 ஓட்டங்கள் இவர்கள் இருவரினாலும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 – சங்கக்கார 8 முறைகள் 500 நிமிடங்களுக்கும் அதிகமாக மைதானத்தில் துடுப்பெடுத்தாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த துடுப்பாட்ட வீரராலும் இந்த சாதனை முறையடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ராவிட், கவாஸ்கர் மற்றும் மஹேல ஆகியோர் 7 முறைகள் 500 நிமிடங்களுக்கும் அதிகமாக துடுப்பெடுத்தாடியுள்ளனர். அத்துடன் இலங்கை வீரர் ஒருவரால் இனிங்ஸில் பெறப்பட்ட மொத்த ஆறு ஓட்டங்கள் 8 ஆகும். இது சங்காவினால் பங்களாதேஷ் அணிக்கெதிராக பெறப்பட்டது.

ஆறு ஓட்டங்களுடன் 300 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் சங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
1438 – 2014 ஆம் ஆண்டில் சங்கக்காரவினால் பெறப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

11 – பிரட்மனுக்கு அடுத்ததாக டெஸ்ட் அரங்கில் பெறப்பட்டுள்ள இரட்டைச் சதங்களின் எண்ணிக்கை.

230 – குமார் சங்கக்காரவின் கன்னி இரட்டைச்சத ஓட்ட எண்ணிக்கையாகும். இதுவே விக்கெட் காப்பாளர் ஒருவரால் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
69.60 – அணித்தலைவராக குமார் சங்கக்காரவின் சராசரியாகும். அது மூன்றாவது அதிகூடிய சராசரியாகும்.
சாதனைகள்

– 2012 இல் விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த கிரிக்கெட் வீரர்
– 2012 ஆம் ஆண்டின் ஐ.சி.சி இன் சிறந்த வீரர்
– 2012 ஆம் ஆண்டின் ஐ.சி.சி இன் சிறந்த டெஸ்ட் வீரர்
– மிக இள வயதில் MCC Spirit of Cricket Cowdrey இல் விரிவுரை நிகழ்த்தியவர்
– டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 8000, 9000, 10,000, 11,000 மற்றும் 12,000 ஓட்டங்களைக் கடந்தவர்
 
       
       




நன்றி நியூஸ் பெஸ்ட் 
« PREV
NEXT »

No comments