Latest News

August 02, 2015

அதிக முறை ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த நடிகர்கள்!
by Unknown - 0

இந்திய சினிமாவை பொறுத்த வரை ரூ 100 கோடி கிளப் என்பது ஒரு நடிகரின் கௌரவமாக தற்போது மாறியுள்ளது. ஆனால், தற்போது இந்திய சினிமா ரூ 500 கோடி வரை அசால்ட்டாக வசூல் செய்து விடுகின்றது. இந்நிலையில் இந்திய அளவில் அதிக முறை ரூ 100 கோடி வசூல் நடிகர்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.

சல்மான் கான்
சல்மான் கான் தும்மினால் கூட அதை படமாக எடுத்து ரூ 100 கோடி சம்பாதித்து விடுவார்கள் போல, அப்படி அவருக்கென்று ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜ் உருவாகி விட்டது. இவர் நடிப்பில் வெளிவந்த டபாங், பாடிகார்ட், கிக், டபாங்-2, ஜெய்ஹோ, ஏக்தா டைகர், ரெடி என 8 படங்கள் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது.

ஷாருக்கான்
சல்மான் கானுக்கு கடும் போட்டி என்றால் ஷாருக் தான், இவர் படங்களுக்கு அதிக தென்னிந்தியாவிலும் தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இவர் நடிப்பில் ரா ஒன், டான் -2, ஹாப்பி நியு இயர், சென்னை எக்ஸ்பிரஸ், ஜப் டக் ஹைஜான் என 5 படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது.

அமீர் கான்
அமீர் கான் தான் இந்திய சினிமாவின் நம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் நாயகன், ஆனால், இவர் குறைந்த அளவில் படம் நடிப்பதால் இவரால் அடிக்கடி இந்த கிளப்பை தொட்டு பார்க்க முடியவில்லை. ஆனால், இவரின் பிகே படம் ரூ 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. இவர் படமான பிகே, தூம்-3, கஜினி, 3 இடியட்ஸ் ஆகிய 4 படங்கள் இந்த கிளப்பில் உள்ளது. இவர்களை தவிர ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், ஷாகித் கபூர் ஆகியோரும் இந்த கிளப்பில் எட்டி பார்த்துள்ளனர்.

ரஜினிகாந்த்
தென்னிந்திய சினிமாவின் வசூல் சூறாவளி தான் பாலிவுட் நடிகர்களுக்கே வசூலில் போட்டியாக இருப்பவர். இவர் நடித்த எந்திரன், சிவாஜி, லிங்கா ஆகிய படங்கள் ரூ 100 கிளப்பில் உள்ளது. இதில் லிங்கா படம் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்
உலக நாயகன் படங்கள் என்றாலே இந்தியா முழுவதும் ஒரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கும், அப்படி மிக எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த விஸ்வரூபம் தான் கமல்ஹாசனின் முதல் ரூ 100 கோடி படம். இதை தொடர்ந்து பாபநாசம் படமும் சத்தமே இல்லாமல் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது.

விஜய்-அஜித்
தென்னிந்திய சினிமாவின் தற்போதைய வசூல் மன்னர்கள் இவர்கள். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால் ஆகிய படங்கள் இந்த கிளப்பில் இணைந்துள்ளது. 

இவர்களை தவிர மற்ற நடிகர்களான விக்ரமின் ஐ, சூர்யாவின் சிங்கம்-2, லாரன்ஸின் காஞ்சனா-2, சமீபத்தில் வெளிவந்த பிரபாஸின் பாகுபலி ஆகியோரின் படங்களும் ரூ.100 கோடி கிளப்பில் உள்ளது.
« PREV
NEXT »

No comments