Latest News

August 14, 2015

மக்கள் தேர்வு செய்த தலைவர்கள் எவரும் ஐநா மன்றத்தில் உரையாற்றவில்லை- கஜேந்திரன்
by admin - 0

நேற்று(13) கிளிநொச்சியில்  இடம் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை காங்கிரசிஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு  அக் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆற்றிய உரை.

மக்கள் தேர்வு செய்த தலைவர்கள் எவரும் ஐநா மன்றத்தில் உரையாற்றவில்லை எனவும், 13,14 களில் இவ்விரண்டு தடவைகள் சமூகம் கொடுத்ததாகவும் அங்கு இலங்கை அரசுக்கு சார்பாக பிரசாரம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

47 நாடுகள் கூடியிருந்த அந்த மாநாட்டில் இவர்கள் யாரும் உரையாற்றவில்லை  எனவும், குறித்த மாநாட்டில் தாம் உரையாற்றுகையில்  த.தே கூட்டமைப்பின் வருங்கால தலைவர் எனப்படும்  சுமந்திரன், சேனாதிராஜா உள்ளிட்ட 6 தலைவர்களும் பார்வையிட்டுக்கொண்டிருந்தார்களே அல்லாமல், இனப் படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என எவரும் உரையாற்றவில்லை என குறிப்பிட்டார்.

13ம் திருத்தசட்டத்தையும், மாகாண சபையையும் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், தமிழ் மக்களின் பிரச்சினை உள்ளது என்பதை சம்மந்தன் அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் அது அடையாளம் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டதுடன், அதனை தாம் சுய நிர்ணய உரிமையுடன் மக்கள் வாழ்வதே பிரச்சினை என்பதை தாம் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையினருடைய உதவியுடன் தமிழ்ர் பிரதேசங்களில் அத்துமீறி வருவதாக தெரிவித்தார். அது மகிந்த அரசின் திட்டமிட்ட இன அழிப்பின் செயற்பாடு என குறிப்பிட்டார். கடந்த மாதம் லட்சக்கணக்காண வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு மாகாண கடற்தொழில் அமைச்சும் மௌனம் காப்பதாகவும் தெரிவிததார். இரணைமடு நீர் யாழ் நோக்கி எடுத்து செல்வது தொடர்பில் தாம் எதிர்ப்பு தெரிவித்த வருவதாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தண்ணீரை மறித்தால் மாத்திரம் போதாது எனவும், அவ்வாறு நீர் எடுத்து செல்லப்படுமிடத்து அதிகாரங்கள் தமிழர்களின் கையில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மகாவலி இரணைமடு இணைக்கப்படும்போது சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்
« PREV
NEXT »

No comments