Latest News

August 14, 2015

மாற்றத்திற்கு தயாராகுங்கள்! கஜேந்திரகுமார் அழைப்பு!!
by admin - 0

தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை மக்கள் இணங்கண்டு நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று இரவு மருதனால் மடப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் எங்களுடைய தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும். இதனை மக்கள் விளங்களிக் கொள்ள வேண்டும். தேச அங்கிகாரத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரவில்லை. எங்களுடைய முன்னைய மாபெரும் தலைவர்கள் எடுத்த முடிவுதான் இது.

இந்த தேச அங்கிகாரம் நடமுறை சாத்தியமற்ற ஒன்று என்றும், வெறும் வெற்றுக் கோசம் இது என்றும் கூறுகின்றார்கள். பிரித்தானிய நாட்டினை எடுத்துப் பார்த்தால் அங்கு நான்கு தேசங்கள் இருக்கின்றது. கனடாவிலும் இரண்டு தேசம் உள்ளது. எனவே இது கற்பனை இல்லை. தேச அங்கிகாரம் என்பது உலகத்தில் வேறு எங்கும் இல்லாத தீர்வு இல்லை. முன்னேறிய நாடுகளில் தேச அங்கிகாரம் இருக்கின்றது. இப்படிப்பட்ட நாடுகளில் உள்ள தீர்வினைத்தான் நாங்ளும் தமிழ் தேசத்திற்காக கேட்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான ஒற்றையாட்சியே தமிழ் மக்கள் மீது நடைபெறுகின்ற இனஅழிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. தமிழ் தேசிய வாதம் எங்களுடைய மனதில் இருக்கின்றவரைக்கும். ஒரு போதும் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.. 

சாதாரண தமிழ் மகள் தான் ஒரு தேசிய வாதி என்று சொல்வதற்கு 5 அடையாளங்கள் உள்ளது.

தமிழ் தேசத்தினை திட்டமிட்டு அழிக்கின்ற சிங்கள தேசத்தினுடைய கொடியினை (சிங்கக் கொடியை) அவன் நிராகரிக்க வேண்டும். சிங்கள தேசத்தின் சுதந்திரமாக கருதப்படும் மாசி மாதம் 4 ஆம் திகதியை கறுப்பு தினமாக பகிஸ்கரிக்க வேண்டும். பௌத்த தேசியவாதத்தை கடைபிடித்து கட்சிக்கு எங்களுடைய மண்ணில் அடம் கொடுக்கக் கூடாது. இதே சிங்கள கட்சிகளோடு இணைந்து செயற்படுகின்றவர்களை துரோயாக பார்க்க வேண்டும். ஒன்றையாட்சியை அடியோடு நிராகரிப்பது என்பதே எங்களை தேசியவாதிகாக காட்சிக் கொள்வதற்காக கொண்டுள்ள அடையாளங்கள்.

சிங்கக் கொடியை பிடித்தும், சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டும், அரசின் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்தும், மேதினத்திற்கான சிங்க கட்சியை இங்கு அழைத்தும் அந்த 5 அடையாளங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளி தேசிய வாதத்தினை இழந்துவிட்டது.

இந்த தேர்தலில் சமஸ்ரியை கையிலேடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச தலைவர்களிடம் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாணசபை அதிகாரத்தினை விட வேறு ஏதையாவது இவர்கள் கேட்டுள்ளார்களா? தேர்தலுக்காகவே இவர்கள் சமஸ்ரியை கையிலேடுத்துள்ளார்களே தவிர அவர்களுடைய உள்ளத்தில் இருந்து சமஸ்ரி என்ற நாமம் எழவில்லை.

எங்களுடைய மக்களுடைய நலன்கள் போனப்படாமம், எங்களுடைய மக்களுடைய இருப்பு உறுதிப்படுத்தப்படாமல், எங்களுடைய தேசம் அங்கிகரிக்கப்படாமல் நாங்கள் அமைதியாக இருப்பதற்கு எமக்கு எந்தவிதமான தேவையும் கிடையாது.

எதிர்வரும் 17 ஆம் திகதி மிக முக்கியமான நாள். இது சாதாரண தேர்தல் இல்லை. இந்த தேர்தலில் வரும் முடிவு எங்களுடைய இனத்தின் விடிவுகாலம் தொடர்பாக ஒரு திருப்புமுனையை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். 

இந்த தேர்தலில் கடந்த 5 வருடங்களாக எங்களுடைய மக்களின் நலன்கள் அத்தனையும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு எங்களுடைய மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிவந்த தலமைகளை இணங்கண்டு மக்கள் நிராகரிக்க வேண்டும்.

அல்லது தொடர்ந்தும் இன்னும் 5 வருடங்களுக்கு இதே தலமைகளைத்தான் தெரிவு செய்யப் போகின்றீர்கள் என்றால் அதனுடைய விளைவுகளை பாதாகங்கள் அனைத்திற்கும் முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

நாங்கள் கூறுகின்ற கருத்துக்கள் உண்மை என்று நீங்கள் நம்பிலால், நாங்கள் நேர்மையாக செயற்படுகின்றோம் என்று மக்கள் நம்பினால் நாம் பதவிக்காக விலைபோகவில்லை என்பதை ஏற்றுக் கொண்டால், எங்களுடைய கொள்கை உறுதியான கொள்ளை இந்த கொள்கை ஊடாகத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பதை புரிந்து கொண்டால் எமது சைக்கில் சின்னத்திற்கு புள்ளடியிடுங்கள்.

எமக்கு புள்ளடியிடுவதுடன் நீங்கள் நின்றுவிடக் கூடாது. எங்களுடைய கொள்கைகளை நீங்கள் எடுத்துச் சென்று ஏனையவர்களுக்கு பகிர வேண்டும். எங்களுடைய இயக்கத்தின் பங்காளிகளாக மாற வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.


நன்றி பதிவு 
« PREV
NEXT »

No comments