தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார்.
உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார்.
ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார். தமிழீழ தேசிய தலைவரால் மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட மாமனிதர் குமார் பொன்னபலத்தை கொச்சைப்படுத்தும் முகமாக சுமந்திரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதானது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதற்க்கு சுமந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்டக வேண்டும் என தமிழ் தேசிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள் .
இவரின் இந்த கூற்று அரசியலில் அறிவற்றவர் என்பதை இந்த சொல்லாடல் மிகவும் ஆணித்தரமாக வெளிக்காட்டியுள்ளது.





No comments
Post a Comment