Latest News

July 17, 2015

வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை விரைவில்சந்திக்கவுள்ளார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்....
by admin - 0


வடக்கு மாகாணத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்ட முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கான வேலைத்திட்டத்தின் தரவுகள் சேகரிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், முதலக்கட்டமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை எதிர்வரும் 20-07-2015 திங்கள் காலை 11:00 மணியளவில் மன்னார் மாவட்ட குடும்பங்களை மன்னார் நகர சபை மண்டபத்தில் சந்தித்து அவர்களது படிவங்களில் அவர்கள் கோரியிருக்கும் வாழ்வாதாரத் திட்டத்தை பற்றிய பரிசீலனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதே போன்று இம்மாத இறுதிக்குள் யாழ் மாவட்டத்தின் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களையும் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார், அத்தோடு கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு தமது படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிய குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்க்கனவே திணைக்களத்தால் அறிவித்தல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனவே அறிவித்தல் கிடைத்த நபர்கள் தவறாது மேற்ப்படி சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


« PREV
NEXT »

No comments