வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1999 ஆண்டு கா.பொ.த சாதாரண தரம் படித்து 2002 இல் உயர்தரம் முடித்து வெளியேறிய பழைய மாணவர்களால் சுமார் 1.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க பட இருக்கும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய முகப்பு வாசலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2002 பிரிவு பழைய மாணவனும் ,பிரபல வர்த்தகரும் ,சமூக சேவையாளருமான திரு ச.சுஜன் தலைமையில் 16.07.2015 காலை 9.00
மணிக்கு பாடசாலையில் இடம் பெற்றது.
நிகழ்வில் சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் , சத்தியராஜ் அடிகளார் , இஸ்லாமிய மௌலவி களுடன் அதிபர் திரு சி.மரியநாயகம் , பிரதி அதிபர் ,ஆசிரியர்கள் , பழைய மாணவர் சங்க தலைவர் திரு எஸ்.திருவருள், பாடசாலை
அபிவிருத்தி குழு செயலாளர் திரு ஜெயசந்திரன் , பழைய மாணவர் சங்க , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்
சந்திரகுமார் (கண்ணன்)2002 பிரிவு பழைய மாணவர்களான திரு தர்சன் ,அகிலன் ,மயூரன், டொக்டர் திலீபன்
, பிரணவன் , அனுசியன் ,ஆயகுலன் ,பார்த்திபன் , மிதுலன் உட்பட பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர் .
மதகுருமார்களின் ஆசி உரைகளை தொடர்ந்துஅடிக்கற்கள் அதிபர்,மதகுருமார் ,மற்றும் ஆசிரியர்கள் , கலந்து கொண்டவர்களால் வைக்க பட்டன. நிகழ்வின் பின் உரையாற்றிய சுஜன் அவர்கள் இது மட்டும் அன்றி நாம் படித்த பாடசாலைக்கு புலம் பெயர்ந்து வாழும் எமது பழைய மாணவ நண்பர்களின் உதவியுடன் எம் பணிகள் தொடரும் என்றார் .
அதிபர் தனதுரையில் எம்பாடசாலைக்கு நீண்டகாலமாக நிலவி வந்த ஒருகுறை தீர்ந்துஉள்ளதாகவும் ,இதுபோன்று எல்லா பழையமாணவர்களும் முன்வரவேண்டும் என்றுகேட்டு கொண்டார் .அதிபர் தனதுரையில் எம்பாடசாலைக்கு நீண்டகாலமாக நிலவி வந்த ஒருகுறை தீர்ந்துஉள்ளதாகவும் ,இதுபோன்று எல்லா பழையமாணவர்களும் முன்வரவேண்டும் என்றுகேட்டு கொண்டார் .பின்னர் பிரதி அதிபர்அவர்களின் நன்றிஉரையுடன் நிகழ்வுநிறைவடைந்தது.













No comments
Post a Comment