Latest News

July 11, 2015

போர்க்குற்ற அறிக்கையை பாதுகாப்புச் சபைக்கு அனுப்ப ஐ.நா மனித உரிமை ஆணையாளர் திட்டம்
by Unknown - 0

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் செய்த் ராத் அல் ஹூசைன், ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் அண்மையில் உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர்,

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான விசாரணை முடிவடைந்துள்ளதாகவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இலங்கையில் நடைபெறும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் கூறுவதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த போர்க்குற்ற அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக ரஷ்யா இலங்கையிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளின் அடிப்படையில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த இணங்கியுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட இலங்கையின் போர் குற்றம் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments