வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசமாக வாழ்வதற்கா ன ஜனநாயக போருக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் ஆணையாகவே, தமிழ்தேசிய மக்கள் மு ன்னணியின் வெற்றி அமையும். என சுட்டிக்காட்டியிருக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஊடகபேச்சாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்.
நாம் தமிழ் மக்களுக்கு என்ன செய்தோம்? என எம்மை சுட்டி கேள்விகளை தொடுப்போர் கட ந்த 5 வருடங்கள் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், சிறைகளில் உள்ளோர் விடுதலை, காணமல் போனோர் விடயம் உள்ளிட்டவற்றில் எங்கள் பங்கு என்ன? என்பதைக் குறித்தும் சற்றே பார்ப்பது சிறந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்தேசிய மக்கள் முன்ன ணி போட்டியிடவுள்ள நிலையில் தேர்தல் நிலமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
விடயம் தொடாபாக மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்த 5 வருடங்கள்,
வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுடைய நிலங்கள் பறிப்பு, உயிர்கள் பறிப்பு, மற்றும் உரிமைகள் பறிப்புக்கு எதிரான குரலாக நாம் தமிழர் தாயகத்திலும் அதற்கு வெளியே ஐக்கி ய நாடுகள் சபையிலும் ஒலித்திருக்கின்றோம். நாம் கடந்த 5 வருடங்கள் என்ன செய்தோம் எ ன சிலர் கேட்க நினைக்கிறார்கள்.
ஆனால்,முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கிராமங்க ள் திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டபோது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என சொல்வோர் எவருமே பார்த்திருக்காத நிலையில் நாம் அந்த மக்களுக்காக குரல் கொடுத்திரு ந்தோம்.
மேலும் முல்லைத்தீவு கேப்பாபிலவு, பகுதியில் தமிழ் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் குடியேற்ற திட்டம் ஒன் றை அமைத்து குடியேற்றிய நிலையில் அதற்கு எதிராக முல்லைத்தீவு நகரில் போருக்குப் பின்னர் முதல் முதலாக ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த மக்களுடைய பிரச்சி னையை வெளிப்படுத்திய ஒரு தரப்பு நாமே, இறுதியாக கிளிநொச்சி நகரில் பரவிப்பாஞ்சான் மக்களுக்காக படையினர் அபகரித்திருக்கும் மக்களுடைய நிலத்திற்காக ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி நில அபகரிப்பிற் கு எதிரான குரலாக ஒலித்திருக்கின்றது. இது மட்டுமல்லாமல் வலி,வடக்கு தொடக்கம் சம்பூர் வரையில் நில பிரச்சினையை இரு தளங்களில்
நாம் நோக்கியிருக்கின்றோம்.
ஒன்று ஆர்ப்பாட்டங்களை ஜனநாயக வழியில் நடத்துவது மற்ற யது சட்டரீதியாக நில பிரச்சினைகளை அணுகுவது. இதனை விட காணாமல்போனவர்கள் பிர ச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் உணர்வுசார் பிரச்சினைகளுக்காக
நாம் குரல் கொடுத்திருக்கின்றோம். இதற்கும் மேலதிகமாக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஏக பிரதிநிதிகள் என சொல்பவர்கள் கூட ஐ.நாசபையில் தமிழ்தேசிய இனத்திற்காக ஒருவார்த்தை பேசியிருக்கவில்லை. நாம் பேசியிருக்கின்றோம்.
போர் நடைபெற்றபோதும், போருக்கு பின்னர் தமிழ்தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட, கட்டமைப்புசார் இன அழிப்பு தொடர்பாக சர்வதேச மட்டத்தில் குரல் கொடுத்த ஒரு தரப்பு நாமாகவே இருக்க முடியும். தேர்தலுக்காக அரசியல் நோக்கங்களுக்காக இவற்றை குறித்து நா ம் விபரிக்கவில்லை.
அனைத்தும் மக்களுக்கு தெரியும். மக்கள் இன்று மாற்றத்தை விரும்புவது யதார்த்தம் அந்த மாற்றத்தை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உருவாக்கும். தமிழ்தேசிய இனம் எதிர்கொள்ளும் அத்தனை இன்னல்களும் அங்க கரிக்கப்பட்ட தமிழ்தேசத்தில் தீர்க்கப்படும் என்றார்.

No comments
Post a Comment