மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பேரினவாதக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலினைப் பார்க்கும் போது தமிழர் அல்லாத இருவர் தெரிவு செய்யப்படும் விதமாக நுட்பமாக திட்டமிட்டுள்ளார்கள்.
இப்பட்டியலில் உள்ள தமிழர்கள் வாக்குசேகரித்து வழங்கும் இயந்திரங்களாக மட்டுமே இருப்பார்கள். தேர்தல் முடிந்ததும் கறிவேப்பிலை போன்றே பயன்படுத்தப்படுவர் இந் நிலைமை தேர்தலின் பின்னர் புரியும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய கோ.கருணாகரம் (ஜனா) அவர்கள் தெரிவித்தார்.
மகிழூரில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குப் பஞ்சமிருக்காது என்பது பொதுவான கருத்து. இது உண்மையோ என்னவோ மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் வேட்பாளர் தெரிவுகள் தலைமை வேட்பாளர் தெரிவுகள் தொடர்பாக நோக்கும் போது இது அப்பட்டமான உண்மைபோலத் தான் தெரிகின்றது.
இங்கு ஏமாறுபவர்களாக எம்மினம் இருப்பது தான் பரிதாபம்.
இன விகிதாசாரப்படியும்வாக்காளர் விகிதாசாரப்படியும் பெரும்பான்மையினர் தமிழர்கள். குறிப்பாக 74 வீதத்திற்க்கு மேல் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் பட்டியலில்
4 தமிழ் வேட்பாளர்கள் 4 முஸ்லிம் வேட்பாளர்கள உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோல பொதுஜன ஐக்கிய முன்னனியில் 5 தமிழர்கள் 3 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தனைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் வேட்பாளர்களில் முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரும் பொதுஜன ஐக்கிய முன்னனியின் தமிழ் வேட்பாளரில் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் முன்னாள் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் போன்ற பெருமையும் மதிப்புக் கொண்ட பிரமுகர்களை தம் வேட்பாளர்களாக இணைத்த பேரினவாதக் கட்சிகள் தலைமை வேட்பாளர்களாகும் தகுதி இவர்களுக்கு இல்லை என்றோ அல்லது இவர்கள் வெறும் போடுகாய்கள் என்றோ அல்லது வடிவேல் பாணியில் வெறும் அள்ளக்கைகளாக கருதியதாலோ அல்லது தமிழர் வாக்குகளைப் பெறும் தகுதி அற்றவர்கள்.
ஆனால் தமிழர்கள் தமது பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை வெளியுலகுக்கு காட்டவேண்டும். என்பதற்காக இணைக்கப்பட்டார்களோ? என்று தமிழர்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது.
ஏனெனில் பேரினவாதக் கட்சிகள் இரண்டுமே தம் பட்டியலின் தலைமை வேட்பாளர்களாக மாவட்டத்தில் 24 வீதமான மக்களைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளையே நியமித்துள்ளார்கள்.
இதிலிருந்து தெரிகின்றது இவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்த பேரினவாதிகளும் ஏனையவர்களும் தமிழர்களை மதிக்கும் இலட்சணம்.
இதைவிட மகத்தான வெற்றி பெறுவோம் என்றுவேற மார்பு தட்டுகின்றார்கள். இவர்கள் யாருக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை எம்மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள். இவர்களை தம் பட்டியலில் இணைத்த பேரினவாதிகளதும் ஏனையவர்களதும் நோக்கம் தமிழர்களின் வாக்கை சிதைத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என்பதனைவிட வேறொன்றும் இருக்காது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரினவாதக் கட்சிகளின் வேட்பாளர் தெரிவு அவர்களது அதி புத்திசாலித்தனத்தையும் தமது இன பிரதிநிதிகளை உயர்வாகப்பெறும் கபட நோக்கத்தையும் அப்பட்டமாக காட்டிநிற்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் தமிழர் வாக்குகள் மூலம் இருகட்சிகளிலும் தமிழர் அல்லாத இருவர் தெரிவு செய்யப்படும் விதமாக நுட்பமாக திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படியலில் உள்ள தமிழர்கள் வாக்குசேகரித்து வழங்கும் இயந்திரங்களாக மட்டுமே இருப்பார்கள். தேர்தல் முடிந்ததும் கறிவேப்பிலைக்கு இருக்கும் மரியாதை கூட இத்தமிழர்களுக்கு கிடைக்காது என்பதைதான் தேர்தல் முடிவின் பின்னரான நிதர்சனமாகும். ஏன அவர் இதன்போது தெரிவித்தார்
No comments
Post a Comment