Latest News

July 18, 2015

மக்களை அறியாத சுமந்திரன் கூட்டமைப்பின் வாக்கு வங்கி குறைய காரணமாகிறாரா?
by admin - 0

யாழ் மாவட்டத்தில் அதிகமான மக்கள்  அரசியல் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை என தனக்கு நெருக்கமான வடமாகாண சபை உறுப்பினர்களிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததாக தகவல் வெளியகியுள்ளது.

எதிர்வரும் பராளுமன்ற தேர்தலில் 3 ம் இலக்கத்தில் போட்டியிடும்  சுமந்திரன் தற்போது மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றார் அவருக்கு ஆதரவாக வடமாகாணசபை உறுப்பினர்கள்  சுகிர்தன் , சயந்தன்  சில பிரதேச சபை உறுப்பினர்கள் திவிரமாக பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

யாழ்மாவட்டத்தில் பல கிராமங்களில் அவரது ஆதாரவாளர்களினால் ஏற்பாடுசெய்யும் மக்கள் சந்திப்புக்களில் மக்கள் அவரிடம் கடந்த காலங்களில் கூட்டமைப்பு தலைமைப்பீடங்களின் கொள்கை மற்றும்அரசியல் காரணமாக விரத்தியடைந்த மக்கள் சுமந்திரன் மீது அதிககோபமாகவும் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் இதன்போது தொடர்ச்சியாக பல கேள்விகளை கேட்டுவருவதுடன் அதற்கு உரியபதில்களை அவரால் வழங்கமுடியமால் இருப்பதாக அறியமுடிகின்றது.

வெளிநாடுகளில் இராஜ தந்திரபணிகளை மேற்கொண்டுவந்த அவரால் மக்களின் ஆதாரவை பெறமுடியாமவில்லை  தமிழ் தேசியத்திலிருந்து இவர் விளகியிருப்பதன்
வெளிப்படே அவரின் மீது மக்களின் வெறுப்பாகும்

அத்துடன் அவர் போகுமிடமெல்லாம் தற்போது சுமந்திரன் மீது மக்கள் கேள்விகளை கேட்டுவருவதாகவும் குறிப்பாக சுகந்திரதினத்தில் கலந்துகொண்டமை அவர் ஊடகங்களில் வெளியீடும் அறிக்கைகள் , அரசுதரப்புடன் கிரிக்கெட் விளையாடியமை தமிழர்களின் துக்கதினத்தில் (may 18) கலந்துகொள்ளாமை, புதிய அரசுடன் இரகசிய பேச்சு போன்ற பல கேள்விகளை குறிபாக இளைஞர் தரப்பால் எழுப்படும் கேள்வியாக உள்ளன இருத்தும் சுமந்திரனினால் விளக்கம் கொடுக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நிலைபாடுகள் அதிகமான மக்கள் சந்திப்புக்களின் போது வெளிபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜ தந்திரத்தில் தேசிபெற்ற அவரால்  தனது மக்களின் ஆதரவை பெறமுடியதுள்ளது அவரின் மக்கள் மத்தியிலான அரசியல் அறிவின்மையே காரணமென தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன் இவர் போன்ற சில தேசிய எதிர்ப்பு வாதிகளினால்தான் கூட்டமைப்பு வரும் தேர்தலில் கனிசமான அளவு வாக்கு வங்கியை இலக்கலாம் என கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அங்களாய்கின்றனர் .


« PREV
NEXT »

No comments