எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் எண்ணங்கள் தொடர்பாகவும் சம கால அரசியல் நிலைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை பிரமுகர்கள் கலந்துரையாடல்களை பரவலாக நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் நேற்று கிளிநொச்சி ஜெயந்திநகர் கிராமத்தில் அக்கிராமத்தின் பொது அமைப்புக்கள் ஆலயங்கள் விளையாட்டுகழகங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்களோடு கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜெயந்திநகர் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபற்ற கலந்துரையாடலில் முன்னாள் பா.உறுப்பினர் சி.சிறீதரன் விசேடமாக கலந்துகொண்டார்.
இதில் கலந்துகொண்ட கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் உரையாற்றுகையில்,
கடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் இந்த தேர்தல் முக்கியமானது இது வரலாற்றுப்பெறுமதி வாய்ந்தது என நாம் உங்களிடம் வாக்குக்கேட்டுள்ளோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெறச்செய்தீர்கள்.
இம்முறையும் முன்புபோலவே நாம் இதுவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்று சொல்லியே வாக்குகளை கேட்கின்றோம்.உண்மைதான் உங்களுக்குத் தெரியும் கடந்த 2010க்கு இங்கு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஒரு நிழல் அரசு இருந்த காலத்தில் வந்த தேர்தல்களிலும் நாம் வாக்களித்து எம் ஜனநாயக பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
ஆனால் அந்த ஜனநாயக பலத்திற்கு அன்றைய இனவாத அரசாங்கம் புலிச்சாயம் பூசி இது புலிகளின் பிரதிநிதிகள் சிங்கள் மத்தியில் ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.
அதன் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்லர் என்று சிங்கள மக்கள் தவறான புரிதலை கொண்டிருந்தனர்.ஆனால் போர் முடிந்து அரசாங்கம் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாக சிங்கள மக்கள் மத்தியில் வெற்றி கொண்டாட்டத்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில் 2010ம் ஆண்டு வந்த பொது தேர்தலில் எமது மக்கள் இழப்பின் வலிகளின் மத்தியிலும் தங்கள் அபிலாசைகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் தேசிய கூட்மைப்பை அதிக ஆசனங்கள் பெறவைத்து மீண்டும் தங்கள் பிரநிதிகளை நிரூபித்தனர்.
அந்த காலத்தில் அந்த தேர்தல் மிக முக்கியமானதாக இருந்தது. அதில் இருந்துதான் எமது ஜனநாயக ரீதியான விடுதலைப்போராட்டம் தொடர்ந்து பயணிக்கின்றது.அதற்கு பின் வந்த ஜனாபதி தேர்தல்கள் மகாண சபை தேர்தல்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் என்பவையும் அக்காலத்தில் இனவாத அரசாங்கம் வடக்கிலும் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்று பரப்பிய பொய் பிரச்சாரங்களை உடைப்பதற்கும் வடக்கு கிழக்கு மக்களின் மாறாத அபிலாசைகளை சொல்வதற்கும் முக்கியமாக இருந்தது.
எனவே இந்த தேர்தல் ஜனவரி 8ம் நாள் நடந்த மாற்றத்துக்கான தேர்தலின் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. எனவே இதுவும் முக்கியமானது இந்த நாட்டில் ஒரு நிரந்தரமான அரசாங்கத்தை அமைப்பதற்கும் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை நிரூபிப்பதற்கும் முக்கியமானது என தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின் உபதலைவர் பொன்.காந்தன் ஜெயந்திநகர் கிராமத்தின் பிரமுகர்களான சந்திரசேகரம் ஞானப்பிரகாசம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.






No comments
Post a Comment