Latest News

July 20, 2015

ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில் மனு தாக்கல்
by admin - 0

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

இந்த மேல்முறையீட்டு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு யாருக்கு உரிமை என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை என்பதை ஏற்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments