வைத்தீஸ்வரன் கோவில்: செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலின் பத்திரகாளியம்மன் சன்னதி முன்பு நான்கு நாட்களாக உணவருந்தாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்துள்ள குரங்கின் வீடியோ வாட்ஸப்பில் வைரலாய் பரவி வருகின்ற காரணத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவிலின் வடக்கு பிரகாரத்தில் பத்ரகாளியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
அம்மனுக்கு வழிபாடு: இந் நிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் ஒரு குரங்கு அம்மனை வழிபட்டபடியே அக்கோயிலின் முன்னர் அமர்ந்திருந்தது.
பால், பழம் சமர்ப்பணம்: இதனை கண்ட பக்தர்கள் குரங்குக்கு பழம், பால் மற்றும் உணவுகள் வைத்தனர். ஆனால் எதையும் உட்கொள்ளாத குரங்கு கருவறை அருகே அமர்ந்து அழுது கொண்டே அம்மனை பார்த்தபடியே உள்ளது.
சாய்ந்து கண்ணீர் மல்கும் குரங்கு: அருகில் செல்லும் பக்கதர்களை எதுவும் செய்யாமல் சுவற்றில் சாய்ந்த நிலையிலேயே அமர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக குரங்கு உணவருந்தாமல் கருவறை அருகே அமர்ந்து வணங்குவது பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனதை உருக்கும் வீடியோ: குரங்கினைப் பார்க்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆன்மீக பக்தர்கள் சிலர் இந்தக் காட்சியை வாட்ஸ் அப்பில் அனுப்புவதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீரும், கூப்பிய கரமுமாக கடவுளை வேண்டும் குரங்கு- வைத்தீஸ்வரன் கோயிலில் பரபரப்பு!

Posted by விவசாயி=farmer on Monday, July 20, 2015
No comments
Post a Comment