Latest News

July 04, 2015

இது நம்மவர் வாரம் ஒரு விளையாட்டு வீரர் -சிறி சிதம்பரலிங்கம் தயானி
by admin - 0


துப்பாக்கி என்றாலே அலறி ஒடும் நம்மவர்கள் மத்தியில் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்து இன்று சர்வதேசத்தில் தடம்பதிக்கும் தமிழ் வீராங்கனை தயானி
வடமராட்சி அத்தாய் கிராமத்தைச்சேர்த்த சிறி சிதம்பரலிங்கம் தயானி நெல்லியடி மத்திய கல்லூரி மாணவியான இவர் சிறுவயது முதல் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம்கொண்டவர். 



இதன் பயனாக பாடசாலை, கோட்டம் ,வலயம் ,மாவட்டம் ,மாகாணம் தேசியம் ,என்று படிபடியாக முன்னேறி இன்று விளையாட்டுத்துறையில் தொடர்த்தும் சாதனை படைத்துவருகின்றார்.

தனது பாடசாலை அணிகளான தடகளம்,மட்டைப்பந்து, உதைப்பந்து கபடி, வலைப்பந்து, எல்லை பூப்பந்து கரம் என்று அனைத்து விளையாட்டுக்களிலும் சிறந்த வீராங்கனையாக திகழ்துவருகின்றார்.


 அத்துடன் தனது சொந்த விளையாட்டுக்கழகமான மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திலும் மேற்படி போட்டிகளிலும் சிறந்துவிளங்கியதுடன் தனது கழகத்தையும் பெருமைப்பாடுத்திவருகின்றார்.
கடந்த வருடம் இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் தடவையாக பங்குபெற்றி தேசியமட்டத்தில் 2ம் இடத்தைபெற்றுதேசியஅணியில் இடம்பிடித்தார்.


கடந்த வருடம் நவம்பர் மாதம் இவரது பாடசாலையேச்சேர்ந்த குமாரவேல் பிரதீபா என்ற இன்னோரு வீராங்கனையுடன் இணைந்துபோலாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாடசாலைவீரார்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டிக்கு இலங்கை சார்பாகபங்குபெற்றுவதற்கு விளையாட்டுத்துறை  அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர்அந்த சுற்றுப்பயணம் விளையாட்டுத்துறை அமைச்சினால் 
கைவிடப்பட்டது 
தற்போது துப்பாக்கி சுடும் பயிற்றுவிப்பாளர் பயிற்சிக்கு இலங்கைசார்பில் தெரிவான மகளிர் ஆறு பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.

 இந்த அணியிலுள்ளஒரேயொரு தமிழ் வீராங்கணை இவர்தான் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லூனர் போட்டிகளில் பங்குபெற்றும் வீரர்களுக்கு பயிற்சிவழங்குவதற்கான தாயார்ப்படுத்தல்களுக்கே அமெரிக்கா செல்லவுள்ளர். 

 தயானி போன்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலைமறைவாக அதிகமான திறமையான வீரர்கள் உள்ளபோதும் உரிய விளையாட்டு மைதானம் உபகரணங்கள் பயிற்சியாளர்கள் உக்கிவிப்புக்கள்
 இன்றி பலவீரர்கள் காணாமலே போகின்றார்கள்.


 எனவே எதிர் வரும் காலங்களில் அதிகளவான தமிழ் வீரர்கள் சர்வதேச போட்டிகுக்கு செல்வாதற்கு உரிய தரப்பினார் அக்கறைகட்ட முன்வரவேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்.

ஆக்கம் எஸ். செல்வதீபன்
« PREV
NEXT »

No comments