தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கையெழுத்து வேட்டை உலகெங்கும் மிகவும் எழுச்சியுடன் பரந்துபட்ட மக்களின் பங்களிப்புடன் உலகெங்கும் வெற்றியுடன் அரங்கேறி வருகிறது.
ஒரு மில்லியன் கையெழுத்து தற்பொழுது செய்தி பதியப்படும் நேரத்தில் 728379 கையொப்பங்களுடன் உலகில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் வேற்றின மக்களின் பங்களிப்புடன் வெற்றிநடை போடுகிறது. குறுகிய காலத்தில் நாடுகடந் தமிழீழ அரசாங்கத்தின் இந்த கையெழுத்து போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள உறவுகள் மிகவும் முழு வீச்சுடனும் ஈடுபாட்டுடன் தமது பங்களிப்பை ஆற்றி வருகிறார்கள். அத்துடன் இந்த கையெழுத்து போரட்டத்தில் தமிழீழ மக்களும் அடக்குமுறைக்குள் இருந்தும் இணையத்தை பயன்படுத்தி இந்த கையெழுத்தை இட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழீழ மக்களும் துடிப்புடனும் தமது உறவுகளுக்கு நீதிவேண்டி கையெழுத்து வேட்டையை சுகந்திர வெறியுடன் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா எதிரான ஒரு மில்லியன் கையெழுத்து போராட்டத்தின் பரப்புரை மையங்களாக சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தபட்டு தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன் வெளிப்பாடே சமுகவளைத்தலங்களில் இன்றைய நாட்களில் மில்லியன் கையெழுத்து போராட்ட பதிவுகலாகவே இருப்பதை அனைவராலும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஸ்ரீலங்கா இனப்படுகொலை அரசானது வெற்றியடையும் மில்லியன் கையெழுத்து போரட்டம் வெற்றியடையவில்லை எனற பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது இதிலிருந்து சிங்கள் அரசு ஒரு மில்லியன் கையெழுத்து போராட்டத்தால் கதிகலங்கி உள்ளதை வெளிக்காட்டுகிறது. ஆகவே தமிழ் மக்களே வெற்றியடையும் பத்து லட்சம் கையெழுத்து போராட்டத்தில் நீங்களும் பங்காளியாகுங்கள் .சிங்கள அரசால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிவேண்டி நீங்களும் கையொப்பம் இடுங்கள்.
அது தொடர்ப்பாக நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற மற்றும் அமைச்சு செயளார்களின் விளக்கமளிக்கும் காணொளிகள் இணைக்கபட்டுள்ளன




No comments
Post a Comment