Latest News

July 28, 2015

குற்றவாளியே தீர்ப்பு சொல்வதா ?சனல் 4 அம்பலப்படுத்திய ஐ.நாவின் ஆவணம்!
by Unknown - 0

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு, உள்நாட்டு விசாரணையே போதுமானதென்  ஐ .நா தீர்மானித்துள்ளதாக, ஐ.நாவின்  கசிந்துள்ள ஆவணத்தை மேற்கோள் காட்டி சனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.

இவ் ஆவணத்தின் ஒரு பிரதியின் படி விசாரணை இலங்கையிலேயே நடக்கும் என்றும் அதை இலங்கை அரசும், வடக்கு மாகாண சபையும் அமுல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கை அரசின் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்க இருப்பது பெரும் வருத்தத்திற் குரியதாக உள்ளது. 

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன நாட்டின் சில உள்கட்டமைப்பு வேலைகளை செய்திருந்தாலும்  அதில் வடக்கு கிழக்கிற்கு செய்தவற்றை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதேபோல் எதிர்வரும் தேர்தலில் பங்கேற்கும் மகிந்த ராஜபக்ஷ  வெற்றியீட்டி  பிரதமர்  ஆகக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  இன் நிலையில் எவ்வாறு போர்க்குற்றவாளிகளே உள்நாட்டு விசாரணை குழுவில் அங்கம் வகிப்பதற்கு  ஐ .நா இடம் வழங்குகின்றதென சனல் 4 கேள்வி எழுப்பியுள்ளது.

« PREV
NEXT »

No comments