பதாதைகளும் கோஷங்களும் மாறியுள்ளதே தவிர ராஜபக்ஷாக்கள் மாறவில்லையென ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ புதிய பதாதைகளைக் கொண்டுவந்துள்ளார். நாட்டுக்கு உயிரூட்ட புதிதாக ஆரம்பிப்போம் என்பது அதன் கருத்து. புதிதாக ஆரம்பிக்கும் விடயம் புதியவர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும், எந்தவொன்றும் புதிதாக மாறியில்லை. மஹிந்த, பசில், நாமல் ராஜபக்ஷாக்கள் எவரும் மாறவில்லை.
ஜே.ஆர். தலைமைத்துவத்தை வழங்கினார். பிரதமர் பதவி, அமைச்சுப் பதவிகளை அவர் கேட்கவில்லை. சந்திரிக்காவும் அப்படித்தான். பின்னால் வந்து பிரதமர் பதவியும், அமைச்சுப் பதவியும் கேட்கவில்லை.
இருப்பினும், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து விட்டு, அரசாங்கத்தின் தலைவராக இருந்துவிட்டு, அமைச்சரவையின் தலைவராக இருந்து விட்டு, முப்படைகளின் தலைவராக இருந்து விட்டு சென்றதன் பின்னர், மீண்டும் வந்து அமைச்சராக வேண்டும் எனக் கூறுகின்றார்.
இதில் தெளிவாக ஒரு விடயம் விளங்குகின்றது. அது தான், பதவி ஆசை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
No comments
Post a Comment