Latest News

July 23, 2015

ராஜிவ் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட உறவுகள் விடுதலையாவார்களா? சுப்ரீம் கோர்ட் கருத்து
by admin - 0

ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்கும் உரிமைக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , சி.பி.ஐ., விசாரிக்காத வழக்கில் ஆயுள் கைதிகளை மாநில அரசு விடுவிப்பது தொடர்பாக மாநில அரசு முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும், அதே நேரத்தில் பயங்கரவாதம் , பாலியல் பலாத்காரம் தொர்புடைய வழக்கில் மாநில அரசு தன்னிச்சயைாக செயல்பட முடியாது என்றும் கூறியுள்ளனர் .

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது .


இந்த மனு மீது முழுமையான முடிவு தீர்ப்பு வழங்காமல் சில யோசனைகளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடுங்குற்றம் செய்யாமல் ஆயுள் தண்டனை பெற்றிருந்தால் அவர்களை விடுவிக்கலாம். 

தடா மற்றும் ஆயுத தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் விடுவிக்க கூடாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ் நாள் முழுவதும் என்று ஆயுள் தண்டனை உத்தரவில் கூறப்பட்டிருந்தாலும் விடுவிக்க கூடாது.


இவ்வாறு கூறியுள்ளனர். ஆனால் ராஜிவ் குற்றவாளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


சி.பி.ஐ., விசாரிக்காத வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுவிக்க முடிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் நீண்ட நாள் சிறையில் இருந்து விட்டோம். கருணை மனுக்கள் கால தாமதம் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களை காட்டி தங்களை விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த தீர்ப்பின் அடிப்படையில் ராஜிவ் கொலையாளிகள் வழக்கு சி.பி.ஐ., விசாரித்து வருவதாகும்.

« PREV
NEXT »

No comments