Latest News

July 16, 2015

கிடைக்கப்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்
by admin - 0

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கும்  அவர்களுக்கான இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.   

 அதன்படி  தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வருமாறு, அருந்தவபாலன் கந்தையா- 01 , ஆனந்தராஜ் நடராஜா-02, ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்-03, ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்-04,  ஈஸ்வரபாதம் சரவணபவன்-05, கந்தர் நல்லதம்பி ஶ்ரீகாந்தா-06, தருமலிங்கம்  சித்தார்த்தன்- 07,  மதினி நெல்சன்- 08 , மாவை சோமசுந்தரம் சேனாதிராசா-09, சிவஞானம்  சிறிதரன்- 10.   இவ்வாறாக ஏனைய கட்சிகளுக்கும்  அவர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. எமக்கு தற்போது கூட்டமைப்பின் விருப்பு இலக்கங்கள் கிடைத்துள்ளன ஏனையவை கிடைக்கப்பெற்றபின் பிரசுரிக்கப்படும் 

யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 15 கட்சிகளும் 06 சுயேட்சைக்குழுக்களும் தகுதி பெற்றுள்ளன.   ஓகஸ்ட் 17 ஆம் திகதி  பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது  

« PREV
NEXT »

No comments