Latest News

July 17, 2015

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்-தமிழர் விடுதலைக் கூட்டணி
by admin - 0

தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கு சர்வதேசத்தின் உதவி இன்றியமையாதது. இந் நிலையில் சர்வதேச ஆதரவைப் பெற்றிருக்கின்ற வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் விக்கினராஜா தெரிவித்தார்.
 
கடந்த் மாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவை வழங்கி சர்வதேசத்தையே வியக்க வைத்தது போன்று  நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலிலும் தமிழினத்தின் விடுதலைக்கான கொள்கைப் பற்றிலும் இனப் பிரச்சனைத்தீர்விலும் அக்கறையுள்ள ஆதரவுள்ள தரப்பினர்களை தெரிவு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
 
யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
 
ஒரு விசித்திரமான சூழலில் நாம் இத் தேர்தலை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்வாங்குதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் துரதிஸ்ர வசமாக உள்வாங்கப்படவில்லை. இதன் பின்னர் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கூட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்ளப்பட்டது. 
 
இத் தேர்தலில் அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் முதலமைச்சர் வேட்பாராக கறை படியாத புகழ் பெற்ற முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை நிறுத்தி அனைத்து மக்களதும் அமோக ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால் இன்று அவரையே அவர் சார்ந்த கட்சியினரே விமர்சிக்கின்றனர். அவரின் செயற்பாடுகளுக்கும் தடங்கல் செய்கின்றனர். இதனால் தமிழ் மக்களின் மனம் வெந்து கொண்டிருக்கின்றது.
 
ஆகவே பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணத்தில் கொள்கைப் பற்றில் உறுதியாக நின்று மக்களுடை தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு துணிச்லுடனும் அக்கறையோடும் செயற்பட்டு வருகின்ற முதலமைச்சருடைய கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதற்காகவே முதலமைச்சருக்கு ஆதரவான அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு வலுச் சேர்க்கின்றவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
 
தமிழினத்தில் உரிமையை வென்றெடுப்பதற்கு சர்வதேச உதவி அவசியிம். ஆதற்குரிய ஆதரவைப் பெற்றிருக்கின்ற முதலமைச்சருக்கு நாம் எமது ஆதரவைக் கொடுக்க வேண்டும். ஆத்தகைய ஆதரவை இத் தேர்தலின் மூலமாக மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. ஏனெனில் அரசியலில் முதிர்ச்சிய அடைந்தவர்கள் தமிழ் மக்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் பொருத்தமான முடிவுகளை எடுத்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இத்தகைய முடிவையே இத் தேர்தலிலும் எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.
 
எமது இனத்தின் உரிமயை நிலை நாட்டுவதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் ஓய்ந்துள்ள இந் நேரத்தில் ஐனநாயகப் போராட்டம் பாரியளவில் விஸ்வருபம் எடுத்துள்ளது. இதற்கமைய இராஐதந்திர நடவடிக்கைகளைப் பயன்படுத்தி கொள்கையிலும் இனப் பிரச்சனைத் தீர்விலும் அக்கறையுள்ள தரப்பினர்களை இணைத்து நாம் சரியான பாதையில் சரியானவர்களுடன் பயணிக்க வேண்டும். 
 
இதற்கு குறிப்பாக இருண்டு போயிருக்கின்ற வீட்டிற்கு வெளிச்சம் ஏற்படுத்துவதற்கு உதயசூரியன் சின்னத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த மாகாணசபைத் தேர்தலில் சர்வதேசம் வியக்கும் வகையில் எவ்வாறு முதலமைச்சரைத் தெரிவு செய்திருக்களோ அதே போன்று நடறெவிருக்கும் பொதுத் தேர்தலிலலும் கொள்கை பற்றிலும் சேவை மனப்பான்மையுடனும் அக்கறை ஆதரவுள்ள தரப்பினர்களைத் தெரிவு செய்து முதலமைச்சரின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.
 
இச் சந்திப்பின் போது அக் கட்சியின் மாவட்ட வேட்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினருமான நடராசா மதிஅழகராசா கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments