புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் இருந்து கொழும்பு சட்டத்தரணி கே .வி தவராசா விலகியுள்ளார் என்று தெரியவருகின்றது. இதனால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர்
முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனினால் முன்னின்று அவசர அவசரமாக கொண்டுவரப்பட்ட கொழும்பு சட்டதரணி தவராசா தற்போது திடிர் என்று வழக்கில் இருந்து வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்தமை பலந்த சந்தேகங்களை உண்டு பன்னியுள்ளது. யாழ்பாணத்தில் பல திறமையான சட்டதரணிகள் உள்ளபோதும் தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவராக இருந்த இவரை அவசரஅவசரமாக இந்த கொலை வாழக்கில் வாதாட களமிறக்கப்பட்டார். கொலை நடைபெற்ற காலபகுதியில் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியும் கண்டனத்தை பெற்ற படுகொலை என்பதினால் தமிழ் அரசில் கட்சிகள் தமது சுய லாபம் கருதி போட்டி போட்டு தமது சட்டதரணிகளை வாதாட முயற்சிசெய்தனர் இதனால் சட்டதரணி் ஆஜர்குவாதற்கு முன்வந்த தவராசா ஊடகங்கள் பல வற்றுக்கு படுகொலைசெய்யப்பட்ட வித்தியாவுக்கு நீதியை பெற்று கொடுப்பேன் கொலை குற்றவாளிகளுக்கு அதி உச்ச தண்டனையான மரணதண்டனையை அவர்களுகளுக்கு பெற்று கொடுப்பேன் நான் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் எனது ஊரில் இவ்வாறான படுகொலைகள் இடம்பெறாது எதிர் வரும் காலங்களில் உறுதிசெய்ய முயற்சிப்பேன்.
வித்தியாவின் வழக்கை இலவசமாக வாதாடவுள்ளேன் என்று இவ்வாறு பல வாக்குறுதிகளை ஊடகங்கள் ஊடக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் மக்களுக்கும் உறுதிஅளித்தார்.
அனால் இன்று திடிர் என்று வாழக்கில் இருந்து அவர் விலகியுள்ளது அனைவரையும் மனவருத்தத்தில் ஆழ்தியுள்ளளது அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இவர் இந்த வாழக்கில் இருந்து விலகுவதற்கான சரியான கராணங்கள் தெரிவிக்கப்படவில்லை இந்த வழக்கில் இருந்து மக்கள் மத்தியில் தமக்கு ஆதாரவுகளை அதிகாரிக்கவே இவர் முயற்சி செய்தரா? அல்லது கொலை குற்றவாளிகளை காப்பற்ற முயற்சி செய்கின்றரா? என்ற சந்தேகம் தற்போழுது எழுத்துள்ளது .
படுகொலைசெய்யப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகள் சட்டத்தின் ஒட்டைகளில் இருந்து தப்பிச்செல்லதாவாறு வித்தியாவுக்காக போராட்டஙகளில் ஈடுபட்டவர்கள் தொடர்சியாக இந்த வாழக்கை கண்காணித்து வருவதுடன் நீதி கிடைக்கும் வரை தமது போராட்டங்களை மேற்கொள்ள முன் வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்
செய்தி எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment