Latest News

July 16, 2015

பிரித்தானிய தூதரக அரசியல் செயலாளர் முல்லைத்தீவில் ரவிகரனுடன் சந்திப்பு
by admin - 0


இலங்கைக்கான பிரித்தானியா தூதரகத்தின் அரசியல் செயலாளர் டோம் சோபர் அவர்களுக்கும் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. 

இன்று முற்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவில் ரவிகரன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரமாக நீடித்தது.

இதன்போது ,கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான அரசியல் சூழல், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பற்றிய விரிவான பார்வை , தமிழர் தாயகத்தில் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் , தமிழ் இளைஞகள் மீது திணிக்கப்படும் புலம்பெயரும் நிர்ப்பந்தம் ,சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மத அடையாளங்கள் திணிக்கும் நடவடிக்கைகள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக ரவிகரன் அவர்கள் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments