Latest News

July 21, 2015

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்திக்கின்றார் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்...
by admin - 0

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்திக்கின்றார் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்...

ஏற்க்கனவே அறிவிக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கான வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரால் அறிவிக்கப்பட்ட வாழ்வாதார திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக  கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்த சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாக ஆராயவுள்ளதால், பதிவு செய்த சகலரையும் தவறாது சமூகமளிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்திப்புக்கள் இடம்பெறும் விபரங்கள்...

23-07-2015 வியாழன் மாலை 3 மணிக்கு யாழ்மாவட்டத்தில் அவரது அலுவலகத்திலும்.

24-07-2015 வெள்ளி காலை 11 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் செல்வபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திலும்.

பிற்ப்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்திலும்.

மூன்று மாவட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு இப்பதிவுகளில் தம்மை பதிவுசெய்யாத இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கருத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments