Latest News

July 03, 2015

இன்றுடன் மஹிந்த மைத்திரி போர் முடிவுக்கு அடிபணிந்தார் மஹிந்த ??
by admin - 0

அண்மை நாட்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நடைபெற்று வந்த கண்ணாம்மூச்சியாட்டம் இன்றைய தினம் நிறைவுக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி தீர்மானம் எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
இந்த தகவலை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ கொழும்பு ஊடகமொன்றுக்கு உறுதி செய்துள்ளார்.

இன்றைய தினம் அதிகாலை வேளையில் மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சி பிளவுபடாத வகையில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்வதாக மஹிந்த, ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஐக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக தாம் எந்தவொரு தியாகத்தையும் அர்ப்பணிப்பினையும் செய்யத் தயார் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை அறிந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காத்திருப்பதாக பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments