Latest News

July 17, 2015

வர்ணம் பூசிய நரிதான் ஆட்சியில் உள்ளது: உதய கம்­பன்­பில​
by admin - 0

தற்போது ஆட்சியில் இருப்பது வர்ணம் பூசிய நரிதான். தனது இனங்களை கண்டால் நரி ஊளையிடும். இதுபோன்றே அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு நிகழ்த்தியிருந்த உரையும் அமைந்திருந்து. இதன் மூலம் அவருடைய உண்மை உருவத்தை கண்டுகொண்டோம். அவருடைய உடம்பில் பச்சை நிற  இரத்தம் ஓடுகின்றது என  மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மீது குற்றம் சுமத்த முடியாது. காரணம் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவர் ஐந்து ஆண்டு காலம் விசுவாசமாக இருப்பார். அதன் பிரதிபலிப்பே இதுவாகும்.

நாங்கள் இந்த தேர்தல் பிரசாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பி ஆரம்பிக்கவில்லை. நாட்டு மக்களை நம்பியே நாங்கள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தோடு நுகேகொடையில் ஆரம்பித்த கூட்டம் முதல் இன்று நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள். இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது எங்கள் வெற்றி எந்தளவில் இருக்கும் என்பது புலப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெறும் நான்கு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். 14 இலட்ச வாக்குகள் சிறுபாண்மையினரின் வாக்குகள் ஆகும். மீதமிருப்பது 42 இலட்சம் வாக்குகள் தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் தனியாக போட்டியிட போவதால் இத்தேர்தலில் வெற்றி பெறபோவது யார் என்பது தெளிவாகின்றது.

நாட்டை பயங்கரவாதிகளிமிருந்து மீட்டெடுத்த போதும் தற்போது மீண்டும் பயங்கரவாதிகளின் விருப்பத்தின் படியே ஆட்சி இடம்பெறுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்ன மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வரமுடியாது என்றார். ஆனால் மீண்டும் அரசியலுக்கு கொண்டு வந்து காட்டினோம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பாளராக தெரிவு செய்யப்படமாட்டார் என தெரிவித்தார். ஆனால் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் உதவியுடன் அவரை வேட்பாளராக்கினோம்.

இதேபோன்று தான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறமாட்டார் என தெரிவித்தார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று பிரதமராகுவார்.

எனவே எவர் எதை சொன்னாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராகுவார்.

மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடைய செய்தது ஐக்கிய தேசியக் கட்சியல்ல. அமெரிக்கா இந்தியாவின் சூழ்ச்சிதான் மஹிந்த வீட்டுக்கு செல்ல காரணமாக இருந்தது.

« PREV
NEXT »

No comments