Latest News

July 10, 2015

எட்டப்பனுக்கு பாராளுமன்ற கதிரை போட்டியின்றி வழங்கப்படுகிறது மைத்திரி உத்தரவாதம்
by admin - 0

தமிழீழ விடுதலைப்போரட்டத்தின் எட்டப்பனும்  முன்னாள் அமைச்சருமான முரளிதரன் ( கருணா) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பணித்துள்ளதாக கருணா தெரிவித்தார்.

வேட்புமனுக்களில் ஒப்பமிடும் நிகழ்வுக்கு இன்று முரளிதரன் (கருணா) வருகை தந்திருந்தார். இதேவேளை கட்சியை பிளவுபடாமல் ஒரே குடையின் கீழ் கொண்டு செல்வதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதேவேளை மைத்திரிபால சிறிசேனவும் மகிந்தவும் ஒரே குடையின் கீழ் செயற்படுவது கட்சிக்கு மிகவும் நல்லது என்று கருணா குறிப்பிட்டார். அத்துடன் குருணாநகல் மாவட்டத்தில் களமிறங்கும் மகிந்த அமோக வெற்றியீட்டுவார் என்றார் அவர்.

அத்துடன் சிறிலங்க சுதந்திரக் கட்சி மீ்ண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

முரளிதரனுக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற கதிரையை வழங்கும் சிங்கள அரசு அவரை இன்றுவரை பாதுகாப்பாக அவரை வைத்திருப்பதற்கான காரணம் என்ன அதாவது காட்டிகொடுக்கும் எட்டப்பர்கள் என்றுமே அவர்களுகுக்கு வேண்டப்பட்டவர்களே.. மைதிரிக்கு கூட்டமைப்பு ஆதரவு மகிந்தவுக்கு கருணா ஆதரவு மகிந்த மைத்திரி இணைவு கருணா என்னும் எட்டபனுக்கு மைத்திரி தேசிய பட்டியல் ஆசனம் வழங்குகிறார்... கூட்டமைப்பின் கொள்ள்கை என்ன ? மைத்திரி வந்திட்டார் கருணா அழிந்தான் இனியபாரதி செத்தான் என்று கூக்கிரல் இட்ட உறவுகளே இப்போது என்ன கூறுவீர்கள் 
« PREV
NEXT »

No comments