
பயண பொதியில் வைத்து அடைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டது. தற்போது இந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் ஊடகங்களில் வெளியான பின்னர் வியாழக்கிழமை காலையில் குறித்த பெண் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. இந்த பெண் சுமார் 7 நாட்கள், புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட ஹெட்டி வீதியிலுள்ள விடுதி ஒன்றில் நபரொருவருடன் தங்கியிருந்துள்ளார். அத்துடன் இந்த பெண் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தகவல் கிடைத்துள்ளது. பெண்ணுடன் தங்கியிருந்த நபர் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் குறித்த நபர் பெண் சடலமாக மீட்கப்பட்ட பயண பொதியை தூக்கிக்கொண்டு விடுதியிலிருந்து வெளியேறும் காட்சிகள் அடங்கிய சீ.சீ.டிவி வீடியோ கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய அந்த நபர் யார் என்பது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக பொதுமக்களின் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் எம்மிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 0112662311, 0112685151 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றபுலனாய்வ துறையினர் மற்றும் புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்' என பொலிஸ் ஊடக பேச்சாளர் மெலும் கூறினார்.
No comments
Post a Comment