Latest News

July 11, 2015

தென்னிலங்கை அரசியல் மாற்றம்போல் தமிழ்த் தலைமைகளும் மாற வேண்டும் -இதுவே ஈ.பி.டி.பி. பிரதான கோசம் என்கிறார் டக்ளஸ்
by admin - 0

தென்னிலங்கை அரசியல் மாற்றம்போல்
தமிழ்த் தலைமைகளும் மாற வேண்டும்
-இதுவே ஈ.பி.டி.பி. பிரதான கோசம் என்கிறார் டக்ளஸ்-
 

தென்னிலங்கை அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டும் போதாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற ஏமாற்று அரசியல் தலைமைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஈ.பி.டி.பி. செயலாலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபின் தெரிவித்தார்.
 
இதுவே  இத்தேர்தலில் தமது கட்சியின் முக்கிய கோசமாக இருக்குமெனவும் அவர் கூறினார்.
 
கடந்த காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இம்முறை மக்களிடம் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுவை நேற்று மாலை யாழ் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். 
 
ஈழ மக்கள் ஐனநாயககக் கட்சிய இம் முறை தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. இதற்கு கட்சியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். அவர்களின் ஆதரவுடன் நிச்சயம் நாம் வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளுவோம்.
 
தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே கடந்த காலத் தேர்தல்களின் போது முன்னெடுத்தவர்கள் அதனையே இம்முறைத் தேர்தலிலும் முன்னெடுத்து வாக்குகளைப் பெற முயல்கின்றனர். ஆனால் மக்கள் தெளிவாக இருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
 
 

« PREV
NEXT »

No comments