இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் 3 ஆவது ஒருநாள் போட்டியின் போது குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் போட்டியின் இடைநடுவே ரசிகர்களுக்கிடையே மோதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
மேலும் மைதானத்தை நோக்கி கல் எறியப்பட்ட தாகவும் தெரியவருகின்றது. பின்னர் வீரர்கள் பாதுகாப்பாக களத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்றதால் ஆத்திரமடைந்த சிங்களவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் மீது தாக்குவதாகவும் இதனால் பதற்றமாக அப்பிரதேசமுள்ளதாகவும், அதிகளவு கலகம் அடக்கும் காவற்துறையினர் குவிக்கப்பட்டிள்ளதாகவும் எமது செய்தியாளர் ரிஷாட் தெரிவித்தார்
இந்நிலையில் தற்போது ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
No comments
Post a Comment