திருமுறிகண்டி இந்துபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பின் மூலம் அக்கிராமத்தின் அத்தியாவசிய தேவைகள் கேட்டறியப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் திரு.து.ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்சந்திப்பானது இந்துபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றதோடு அத்தினத்திலேயே கிராம மக்களின் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 2015-06-19 அன்று முல்லைத்தீவு இந்துபுரத்தில் அமைந்துள்ள பொதுநோக்குமண்டபத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
திருமுறிகண்டி இந்துபுரம் கிராம மக்களின் காணிஅனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுடன் சேர்த்து நடைபெற்ற இம்மக்கள் குறைகேள் சந்திப்பில் அக்கிராமத்தில் உள்ள குறைகள் மற்றும் அக்கிராமம் சார்ந்த அத்தியாவசிய தேவைகள் என்பவை தொடர்பில் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
கிராம அலுவலர் தலைமையில் வடமாகாணசபை உறுப்பினர் திரு.துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஏறத்தாழ 160க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதோடு அதன் தொடர்ச்சியாக மக்களின் குறைகளை கேட்கும் விதத்தில் குறைகேள் சந்திப்பொன்றையும் ரவிகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
மக்களால் முன்வைக்கப்பட்ட பிணக்குகளில் முதன்மையானவையாக,
தம் கிராமம் முல்லைத்தீவு-கிளிநொச்சி மாவட்ட எல்லைக்கிராமமாக இருப்பதால் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மயானத்தையே தாமும் பாவிக்கவேண்டியுள்ளதை கூறிய மக்கள் அதற்குரிய தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனவும்,
தங்களுடைய கிராமத்தின் ஐந்து உள்வீதிகள் புனரமைப்பு செய்யப்படவேண்டியதன் தேவையையும்,
கட்டிமுடிக்கப்பட்ட நூல் நிலையத்துக்கு உரிய புத்தகங்கள் மற்றும் சில உதவிகள் வழங்கப்படவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு குறைகளையும் பலரும் எடுத்துக்கூறினர்.
மக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்ட வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தனது பதில் உரையில்,
மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்துமே நிறைவேற்றக்கூடியது தான் என்பதை தெரிவித்தார்.
அந்த வகையில் உரிய திணைக்களங்களோடு தொடர்பு கொண்டு கூடிய விரைவில் இவைகள் தீர்க்கப்படுமெனவும் தனது ஒதுக்கீட்டின் மூலம் நூலகத்தின் தேவைக்காகவும் கிராமத்துக்காகவும் நிதி ஒதுக்கப்படும் என்றும் சபையில் தெரிவித்தார்.
கூட்டம் நிறைவுற்றதும் நூலகத்தை பார்வையிட்டதோடு பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளோடும் கலந்துரையாடி மேற்படி கோரிக்கைகளின் விண்ணப்பங்களையும் பெற்றுச்சென்றார்.
இக்கூட்டத்தில் கிராம அலுவலர் கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் பிரதேச செயலாளர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர்.

No comments
Post a Comment