Latest News

July 10, 2015

13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு
by admin - 0

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில்வேட்பு மனுக்களை  தாக்கல் செய்யும் பணிகள் கடந்த ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி நிறைவடைகின்றது.
தேர்தல் பணிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அது தொடர்பில் விரைவில் தேர்தல்கள் ஆணையாளர் தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார்.
மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14 ஆம் திகதி அனுப்பிவைக்க முடியும். இந்நிலையில் ஆசிரியர்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
எதிர்வரும் 13 ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்ததும் 12 மணி முதல் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும். அதன் பின்னர் சின்னங்கள் உறுதிபடுத்தப்படும்.நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன. அதன் படிமாவட்ட  ரீதியாக வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு:-
« PREV
NEXT »

No comments