Latest News

June 08, 2015

உள்ளக விசாரணை தனிநாட்டிற்கு வழிசமைக்கும் -விமல் வீரவன்ஸ
by Unknown - 0


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தலைமையில் இலங்கையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டுப்படுகொலை நிகழ்த்தப்பட்டதான விடயத்தை இலங்கை அரசே ஒத்துக்கொண்டாத மாறிவிடும் . இது இந்த நாட்டில் தனிநாடு கோருவதற்கான நியாயப்பாட்டை
ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.    

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.   அவர் இங்கு மேலும் கருத்துவெளியிடுகையில் "சர்வதேச விசாரணைக்கு ஒத்துப்போகும் வகையில் உள்ளக விசாரணை நடத்தப்படுகின்றது. யுஎன்டிபியின் இலங்கைப்பிரதிநிதியின் அறிக்கையின் படி இந்த உள்ளக விசாரணைக்கு ஜெனிவாவிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தலைமைத்துவம் வழங்குகின்றமை தெரிவிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மனபில சுட்டிக்காட்டியிருந்தார். 

ஒத்துழைப்பு தொழில்நுட்ப உதவி போன்ற விடயங்களும் அதில் உள்ளன. ஆனால் அதற்கு மேலாக இந்த விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தலைமைத்துவம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தலைமைத்தும் வழக்கப்படுகின்றது என்பதனால் அர்த்தப்படுத்தப்படுவதென்ன உள்ளக விசாரணையை சர்வதேச விசாரணைக்கு ஈடாக கொண்டுசெல்லுகின்ற விசாரணையென்பதாகும். அதிலும் செப்டம்பரில் ஜெனிவாவில் வழங்கப்படும் தீர்ப்பிற்கு ஈடான தீர்ப்பு வழங்கப்படும். கூட்டுப்படுகொலை இடம்பெற்றதாக நாமே ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். 

இலங்கையில் நடக்கும் விசாரணையிலேயே தமிழின கூட்டுப்படுகொலையிடம்பெற்றதாக ஏற்றுக்கொண்டதாகிவிடும். கூட்டுப்படுகொலை இடம்பெற்றதாக ஏற்றுக்கொள்வதே இந்த நாட்டில் தமிழர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தனிநாடொன்றை ஸ்தாபிப்பதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளதெனக் நியாயப்படுத்துவதற்கு வழிகோலியதாகிவிடும். 
« PREV
NEXT »

No comments