ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், நா.தமிழீழ அரசாங்கமும் சிறிலங்கா அரசாங்கமும் எதிர்எதிர் அறையில் ஒரே நாளில் கூட்டங்களை நடத்திய சம்பவமொன்று பரபரப்பாக பார்க்கப்படுகின்றது.
9ம் இலக்க அறையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், 10ம் இலக்க அறையில் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக சமூகத்தை நோக்கிய இக்கூட்டங்களை நடாத்தியுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (ர்லடிசனை ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து, அனைத்துலக விசாரணையூடாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென்பதனை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூட்டத்தினை 9ம் இலக்க அறையில் நடாத்தியிருந்தது.
இதற்கு நேர்எதிராக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து உள்ளக விசாரணைப் பொறிமுறையினை நியாயப்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் 10ம் இலக்க அறையில் கூட்டத்தினை நடாத்தியுள்ளது.





No comments
Post a Comment