Latest News

June 11, 2015

தமிழ் ஈழ கோரிக்கையில் உறுதியாக உள்ள அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தக்கூடாது-சம்பிக்க
by Unknown - 0

காயமடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என சில அமைச்சர்கள் யோசனையை கொண்டுவந்தனர்,ஆனால் தனது கடும் எதிர்ப்பின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் , 

வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது போன்று புலம்பெயர் திருவிழாவை நடத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம், அவ்வாறான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது பயங்கர வாதத்தையும், இனவாதத்தையும் மீண்டும் தூண்டக்கூடும்.

அரசாங்கத்திற்குள் இது குறித்து; பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை, பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தடைசெய்த அமைப்புகளுடன் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது சமாதானத்தை ஏற்படுத்தும் என நாங்கள் கருதவில்லை.

இந்த விடயங்களுக்கு தீர்வை காணவேண்டும் என்றால் தமிழர் தரப்புகள் ஓற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்,அவர்கள் தமிழ் ஈழ கோரிக்கையில் உறுதியாக உள்ள நிலையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை காணமுடியாது, அது குறுகிய அரசியல் இலாபங்களை பெறுவதற்கான முயற்சியாகும்.

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments