தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை பேணிய புலம்பெயர் அமைப்புகளுடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்துரையாடல்களை நடத்துவதால், தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உலகத் தமிழர் பேரவையுடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு குத்தகம் ஏற்படுத்தும்.
லண்டனில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல்களில், இலங்கை அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திய அமைப்புகளே கலந்து கொண்டன.
வெளிவிவகார அமைச்சர் நடத்திய இந்த பேச்சுவார்த்தைகள் காரணமாக இலங்கை மக்கள் சந்தேகமும், அச்சமும் அடைந்துள்ளனர்.
இந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக அமைச்சர் மக்கள சமரவீர, அமைச்சரவையிடமோ, ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ அனுமதியை பெற்றுக்கொண்டாரா எனவும் எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கேள்வி யெழுப்பினார்.
குறித்த புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை அகற்றுவது தொடர்பாக இந்த கலந்துரையாடல்களில் பேசப்பட்டதா.
யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments
Post a Comment