யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்கு இலங்கையே தலைமைதாங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது நலனிற்கு நன்மையளிக்க கூடிய வெளிவிவகாரக்கொள்கையையே பின்பற்றும் தனது அயல்நாடுகளுக்கு நன்மையளிக்க கூடிய கொள்கையை பின்பற்றாது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவர் நிக்கி ஏசியன் ரிவியுவிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட போர்ட் சிட்டி திட்டம் நான் அறிந்தவரையில் ஆய்விற்குட் படுத்தப்பட்டுள்ளது,
ஆனால் சீனா முதலீடு இதற்கு காரணமல்ல மாறாக இலங்கையின் புதிய அரசாங்கம், ஊழல்கள் நிறைந்த சகல அபிவிருத்திதிட்டங்கள் குறித்தும் மறு ஆய்வினை மேற்கொண்டுள்ளதே அதற்கு காரணம்.
ராஜபக்ச அரசாங்கம் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதியை வழங்கும்போது நாட்டின் தேவைகளை கருத்திலெடுக்கவில்லை.
ஆனால் இலங்கை சீனாவுடன் வரலாறு முழுவதும் நெருக்கமான உறவை பேணிவருகி;ன்றது,அந்த அற்புதமான உறவை பேணவிரும்புகின்றோம்.
இலங்கை சீனா தலைமையிலான ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியில் இணையவுள்ளது,
இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றாலும்,சிறிசேனா அரசாங்கம் இந்தியா சார்பானதல்ல மாறாக இலங்கை சார்பானது.
பாராளுமன்றம் அடுத்த சில வாரங்களிற்குள் கலைக்கப்படும் என நாங்கள் கருதுகின்றோம், தேர்தலிற்கு பின்னர் ஏற்படுத்தப்படும் அரசாங்கம் இலங்கைக்கு மிகவும் புதியதாக அமையும், இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இணங்கியுள்ளன.
நல்லிணக்கம் தேசிய ஐக்கியம் இல்லாமல்,நிரந்தர சமாதானத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியாது,இதில் சில முன்னேற்றங்களை கண்டுள்ளோம், வடகிழக்கின் இராணுவ ஆளுநர்களை மாற்றியுள்ளோம்,இராணுவத்திடமிருந்த 1000 ஏக்கர் நிலத்தை மீள மக்களிடம் வழங்கியுள்ளோம்,
இலங்கையின் புதிய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தால் இலங்கையின் பல்வேறுபட்ட சமூகங்களின் துயரங்களிற்கு தீர்வை காணக்கூடிய அரசியல்தீர்வை முன்வைக்கமுடியும் என எதிர்பார்க்கின்றோம்,
இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் யுத்த குற்றங்கள் மற்றும்மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு இலங்கை ஒரு பொறிமுறையை அமைக்கும்,அதற்கு ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப உதவி பெறப்படும்,ஆனால் அது ஓரு தனித்துவமான இலங்கை பொறிமுறைiயாக அமையும், இலங்கையே அதற்கு தலைமை வகிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment