Latest News

June 09, 2015

ஸ்கன்டிநேவியா நாட்டையே நாம் நல்லாட்சி நாடாக நோக்கலாம்; இலங்கையை அல்ல-யாழ்.விரிவுரையாளர் விக்னேஸ்வரன்
by Unknown - 0

இலங்கையில் ஏற்பட்டிருப்பது நல்லாட்சி இல்லை. ஸ்கன்டிநேவியா என்ற நாட்டையே நாம் நல்லாட்சி நாடாக நோக்கலாம் தவிர இலங்கையை அல்ல.2009ஆம் ஆண்டிற்கு பின்னர் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் கடந்த கால அரசின் திட்டமிட்ட செயற்பாடு என யாழ்ப்பாண அரச அறிவியல் துறையின் விரிவுரையாளர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.     

இன்று ரில்கோ விடுதியில் இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச மையத்தின் ஏற்பாட்டில்  இலங்கையின் உண்மை,நியாயம்,நல்லிணக்கம் தொடர்பான வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,   இலங்கையின் மனித உரிமை மீறல்கள், அனைத்தும் இடம்பெற்றமைக்கு கடந்த கால அரசின் திட்டமிட்ட செயற்பாடு அதனை யாராலும் மறுப்பதற்கு இல்லை. இவ்வாறான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் ஏற்பட்டு 5 வருடங்கள் கழிந்தும் இன்னமும் இதற்கான உண்மை கண்டறியப்படவில்லை. இராணுவம் உண்மையை சொன்னதா?கடந்த அரசு இதற்கு உண்மையான விசாரணையை மேற்கொண்டதா? இல்லை.எனவே இலங்கையில் நல்லிணக்கம் உண்மை நியாயம் என்பன எவ்வாறு? ஏற்படும்.   

இலங்கையில் உண்மை,நியாயம்,நல்லிணக்கம் என்பன ஏற்படுவதற்கு வேறுபட்ட பொறிமுறை மூலம் குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற சட்டதண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments