கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் இடையில் பாரியளவில் வித்தியாசம் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கடந்த அரசாங்கத்திற்கும் இடையில் சொற்பளவிலான வேறுபாடே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்காக மட்டும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் உள்ளிட்ட அனைவரையும் தோற்கடிக்க வேண்டுமென்பதே மக்களின் எண்ணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நபர்களை இந்த அரசாங்கம் ஆலோசகர்களாக வைத்திருந்தால் அதனால் நாட்டுக்கு தீமையே ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment