வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் 24 வது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள். - பிரித்தானியா
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று (21.06.2015) பிரித்தானியாவில் உள்ள Sutton Atheletic மைதானத்தில் காலை 11 மணியளவில் தமிழீழ தேசியக் கொடி மற்றும் கழகக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளானது மாலை 6 மணி வரையும் மிகவும் சிறப்புற நடந்தேறியது.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் பிரித்தானியாவில் வாழ்கின்ற அதிகளவிலான வல்வையர்களில் சிறிவர்கள் முதல் பெரியோர்கள் என அனைவரும் பலவித போட்டிகளில் பங்குபற்றி போட்டிகளை சிறப்பித்திருந்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு முறையின்படியே பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
வெளிநாட்டு இயந்திரத்தனமான நேரமில்லாத வாழ்க்கைக்கு மத்தியில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளூடாக தமது ஊர் உறவுகளோடு உறவாடி மனமகிழ்வதோடு மட்டுமின்றி தமது குழந்தைகளுக்கான ஊர்பற்றினையும், ஊரவர்களின் உறவுகளையும் வளர்த்துக் கொள்ள முடியும் என பலர் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
படங்கள் உதவி : மணிமாறன் இனிதா
No comments
Post a Comment