ஆர்யா சினிமாவில் ஓய்வின்றி வலம் வந்தாலும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
கடந்த ஒருவருடமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியை தீவிரமாக செய்துவந்த ‘வாடேர்ன் ருன்டன் ரேஸ்’ என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டில் மோட்டலா என்ற ஊரில் நடந்து வரும் போட்டியில் ஆர்யா கலந்துகொண்டார்.
அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும்.
இந்த பந்தயத்தில் கலந்துகொண்ட ஆர்யா, வெற்றிகரமாக 300 கி.மீ. தூரத்தை கடந்து பரிசு வென்றுள்ளார்.
இதுகுறிந்து ஆர்யா கூறும்போது, வாடேர்ன் ருன்டன் ரேஸில் பதக்கம் வென்றுவிட்டேன். என் கனவை நனவாக்கிய முருகப்பா குரூப்ஸ் டிஐ சைக்கிள், அருண் அழகப்பனுக்கு கோடி நன்றிகள். நான் இந்த பந்தயத்தில் வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
இந்த பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 8 மாதங்களாக ஆர்யா தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment