சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சியின்போதே மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்பட்டன என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை அழித்து நாசப்படுத்தி விட்டதாக முன்னாள் ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கவின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ள அவர் இலங்கையின் பொருளாதாரத்தை உன்னத நிலைக்கு கொண்டுசெல்லக் கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்சவே எனவும் தெரிவித்துள்ளார்.
பொறாமை காரணமாக மகிந்தராஜபக்சவின் நற்பெயரிற்கு சந்திரிகா களங்கம் ஏற்படுத்த முயல்கின்றார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
No comments
Post a Comment