Latest News

June 11, 2015

பாராளுமன்றத்தைக் கலைப்பது உடனடிச் சாத்தியம் இல்லை!
by Unknown - 0

20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமாயினும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காவிட்டால், பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று சொல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன.

19ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ கர்ச்சிக்கத் தொடங்கியுள்ளார். நான் பிரதமரானால் சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்ற அவரின் கருத்து, 

ஜனாதிபதியிடம் இருந்த அதிகாரத்தை பிரதமருக்கு மாற்றிவிட; முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பிரதமராகும் ஆசையில் இப்போதே அறிக்கைவிட தொடங்கியுள்ளார்.

நான் பிரதமரானால் சிறைச்சாலையில் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்று கர்ச்சிக்கின்ற அளவில் மகிந்த ராஜபக்­வின் துணிச்சல் இருக்கிறது எனில் பாராளுமன்றத்தைக் கலைப்பது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிந்திப்பது அவசியம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன கூறிய முதல் வார்த்தை, நான் யாரையும் பழிவாங்க மாட்டேன் என்பதாகும்.

அதேநேரம் தேர்தலில் தோற்றுப்போன மகிந்த ராஜபக்­, 19 ஆவது திருத்தச்சட்ட மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டபோது கூறிய முதல் வார்த்தை, நான் பிரதமரானால் சிறையில் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதாகும்.

ஆக, இலங்கையின் ஆட்சியில் தனிமனித அதிகாரங்கள் தனியாள் வேறுபாடுகள் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதிலிருந்து இந்த நாட்டுமக்கள் உணர முடியும். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். மகிந்த ராஜபக்­வின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்­ இப்போது சிறையிலேயே உள்ளார்.

மகிந்தவின் மனைவி ´ராந்தி ராஜபக்­ மீது நிதி மோசடி விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். மகிந்தவின் அடுத்த சகோதரர் கோத்தபாய ராஜபக்­வை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்ற போதும் நீதிமன்றின் தலையிட்டால் அந்தக் கைது காலதாமத மாகிறது.

நிலைமை இதுவாக இருக்கையில், நான் பிரதமரானால் சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்று மகிந்த கூறியிருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

அதேநேரம் மகிந்த ராஜபக்­வின் மேற்போந்த கூற்று அவரின் இராஜதந்திரப் பலவீனம் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

எதுவாயினும் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துதல் என்பது உடனடிச்சாத் தியமாகாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூற முடியும்.

அதை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துதல் என ஜனாதிபதி மைத்திரி  நினைத்தால் மகிந்தவை மடக்கும் மகாதிட்டம் ஒன்று பின்னணியில் நிறைவேறி விட்டது என்றே பொருள் கொள்ளவேண்டும். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
« PREV
NEXT »

No comments