Latest News

June 11, 2015

உலகத் தமிழர் பேரவை மீதான தடை நீக்கப்படும் சாத்தியம்?
by Unknown - 0

உலகத் தமிழர் பேரவை உட்பட 16 அமைப்புக்களையும் பல தனிநபர்களையும் சட்டரீதியாக்கித் தடைசெய்து, கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி, மீளாய்வில் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு  நேற்று தெரிவித்தது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே இதைத் தெரிவித்தார்.

அண்மையில் இலண்டனில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதைத் தெளிவுபடுத்தினார்.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானில் சில அமைப்புக்களும் பல தனிநபர்களும் சட்டரீதியாக்கப்பட்டுத் தடைசெய்யப்பட்டன எனத் தெரிவித்த அவர், பொருத்தமான அதிகாரசபைகள் அந்தப் பட்டியலை ஆகக்குறைந்தது வருடந்தோறுமாவது மீளாய்வு செய்ய வேண்டிய தேவையிருப்பதாகவும்  குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இது தொடர்பான அமைச்சான பாதுகாப்பு அமைச்சு, ஏற்கெனவே, இந்தப் பட்டியலை மீளாய்வு செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் உலகத் தமிழர் பேரவை தடை செய்யப்பட்ட அமைப்பா எனக் கேட்கப்பட்டமைக்கு அவர், 'தற்போதைய வர்த்தமானியின் அடிப்படையில் சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட அமைப்பு, ஆனால், அது தற்போது மீளாய்வு செய்யப்படுகிறது' என மீண்டும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments