Latest News

June 16, 2015

நான் ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா?- அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க
by Unknown - 0

நாட்டில் தற்போது பாரிய அளவிலான குழப்ப நிலை தோன்றியுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உடுனுவர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்று வருவதாக கூறுகின்றார்கள் எனினும் காணவில்லை. நாட்டில் மிகவும் குழப்பமான நிலைமை ஒன்றே நிலவுகின்றது.

நான் ஆளும்  கட்சியா அல்லது எதிர்க்கட்சியா என்று எனக்கு தெரியவில்லை. எனினும்  நான் எதிர் கட்சி என்று  கூறுவதற்கே விருப்புகின்றேன்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுள்ளேன். தற்போது பாரிய சிக்கலுடனே நாடு செல்கின்றது.

எனினும் இவை அனைத்திற்கும் மத்தியில் எதிர்காலத்தில் நாட்டை சரியான ஒரு பாதையில் கொண்டு செல்ல கூடிய திறன் எங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றதென எங்களுக்கு நம்பிக்கையுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments