Latest News

June 30, 2015

ரூபனுக்கு தமிழரசுக் கட்சியில் இடமில்லை!
by Unknown - 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் புலிகளின் உறுப்பினரான அமிர்தலிங்கம் ரவிந்திரன் (ரூபன்) போட்டியிடவுள்ளார் என்று வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மையில்லை எனக் கூட்டமைப்பின் உயர்மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் போராளியான ரூபன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை வந்து சந்தித்துக் கலந்துரையாடினார் என்றும், எனினும் அப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தன்னிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் போராளியான ரூபனுக்கு தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்படி ஒரு முடிவு ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தமிழரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
« PREV
NEXT »

No comments