இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் இறுதிநாளான இன்றைய தினம் ஆட்டம் ஆரம்பமாகும் போது, இலங்கை அணி வெற்றி பெறுவதற்காக 153 ஓட்டங்களை பெறவேண்டியிருந்தது.
அதற்கமைய இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்த 50 ஓட்டங்களை, கித்ருவன் விதானகே 34 ஓட்டங்களையும், குமார் சங்ககார ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காமல் அஞ்சலோ மேதிவ்ஸ் 43 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்ன 20 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்று பாக்கிஸ்தான் அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக சகல விக்கட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலாவதாக துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 315 ஓட்டங்களை பெற்றது.
மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர்பில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளது.

No comments
Post a Comment