விஜய் டிவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார் டிடி... இல்லை இல்லை விஜய் டிவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் டிடி என்று ஒரு தகவல் பரவியது. டிடி கர்ப்பம் என்றது ஒரு செய்தி... அட இல்லைப்பா டிடிக்கு காலில் சுளுக்காம் அதனால ரெஸ்டாம் என்று செய்தி போட்டார்கள்.
இப்படி எங்கு பார்த்தாலும் டிடி எதில் பார்த்தாலும் டிடி பத்திய செய்தியாகவே இருந்தது. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 2 மாதகாலமாகவே விஜய் டிவியில் டிடி என்கிற திவ்யதர்ஷினியை எந்த நிகழ்ச்சியிலும் காணவில்லை. எனவே டிடி எங்கே என்று தேட ஆரம்பித்துவிட்டனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் திவ்யதர்ஷினியின் திருமணம் நடைபெற்றது. எல்லா ஊடகங்களிலும் இந்த திருமணம் பற்றி செய்தி வெளியானது. சரியாக ஒரு ஆண்டு கழித்து முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் திவ்யதர்ஷினியைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை எங்க வீட்டு செல்லம் டிடி என்று சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது விஜய் டிவி.
எத்தனை பேரு வந்தாலும் எனக்கு 60 வயசு ஆனாலும் நான்தான் விஜய் டிவியோட செல்லம். நான் எப்பவுமே விஜய் டிவியை விட்டு போகமாட்டேன் என்று கூறி முடித்தார் டிடி.
No comments
Post a Comment