Latest News

June 09, 2015

டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் சங்கக்காரா, மேத்யூஸ், ஹேராத்!
by Unknown - 0

சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகள் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள்:-

சங்கக்காரா (இலங்கை) 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா 2வது, 3வது இடங்களில் உள்ளனர்.

சுமித் (அவுஸ்திரேலியா), மேத்யூஸ் (இலங்கை), யூனுஸ்கான் (பாகிஸ்தான்), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), வார்னர் (அவுஸ்திரேலியா), விராட் கோஹ்லி ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள்:-

ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹாரீஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

பவுல்ட் (நியூசிலாந்து), ஜான்சன் (அவுஸ்திரேலியா), ஹேராத் (இலங்கை), பிராட் (இங்கிலாந்து), பில்லாண்டர் (தென் ஆப்பிரிக்கா), மொர்கல் (தென் ஆப்பிரிக்கா), சவுத்தி (நியூசிலாந்து) ஆகியவர்கள் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர்.

நாடுகள்:-

தென் ஆப்பிரிக்கா 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. இந்தியா 99 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறது.

நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 8வது இடங்களில் உள்ளன. வங்கதேசம் 9வது இடத்திலும், ஜிம்பாப்வே 10 இடத்திலும் இருக்கிறது.
« PREV
NEXT »

No comments